More

பட்டாசுக்கு தடை செய்த மாநிலங்களுக்கு முதல்வர் கடிதம் – தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இந்தியா முழுவதும் வருகிற 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு விற்பனையை நம்பி சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

இந்நிலையில், இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும், காற்று மாசுபடும் எனவும் கூறி அம்மாநில அரசுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

இதனைத்தொடர்ந்து, அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.  அதில், பட்டாசு வெடிப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு விற்பனையில் 4 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். எனவே, பட்டாசுக்கு தடை விதித்தால் 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். 

மேலும், தமிழகத்தில் காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை ஏற்பட வாய்பில்லை. எனவே, பட்டாசு வெடிப்பதர்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த செயல்பாடு பட்டாசு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts