சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.
நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் உள்பட 532 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
நேற்று மாலையே இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 235 வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செயலாளர் பதவிக்கு T.மன்னன், பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…