அப்பா பிஸி, அதான் அம்மா கூட ஒரு போட்டோ! வைரலாகும் குட்டி தல புகைப்படம்

அதனால் தான் அம்மா கூட ஒரு போட்டோ எடுத்துக்களாம்னு வெளியில் வந்தேன் என்று சொல்வது போன்று நம்ம குட்டி தல போட்டோ அதிக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றது.

தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஜீத். தனது நடிப்பு மட்டுமின்றி தனித்தன்மை வாய்ந்த சில நற்குணங்களாலும் ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா துறையிலும் அதிகமான ஆதரவாளர்களை பெற்றிருக்கிறார். 

பொதுவாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவது கிடையாது என்றாலும் அவரது பெயரை சொல்லும் போதே கைதட்டலும் விசிலும் விண்ணை பிழக்கும்.

பொதுவாக இவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றி புகைப்படங்களோ தகவல்களோ வெளியில் வருவது மிகவும் குறைவு தான். அப்படி இருக்க தற்போது நம்ம தலயின் மகன் குட்டி தல ஆத்விக் ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சும்மா விடுவார்களா நம்ம ரசிகர்கள் முடிந்தவரை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Published by
adminram