இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வந்து தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி, சாலையோரங்களில் தங்கியிருந்த லட்சக்கணக்கான பேர் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில் எதுவுமில்லாமல் 500, 1000 கி.மீட்டர் தூரமுள்ள தங்களின் மாநிலத்திற்கு அவர்கள் மூட்டை முடிச்சுயுடன், பிள்ளை குட்டிகளை கூட்டிக்கொண்டு நடந்தே செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி செல்லும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்பாடு செய்து தராமல் மத்திய அரசு 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிட்டதாக எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் புகார் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அப்படி நடந்தே உத்தரப்பிரதேசம் சென்ற தொழிலாளர்களை ஓரிடத்தில் அமரவைத்து மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி கலந்த நீரை அவர்கள் மீது தெளித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரம் ஆனவுடன், அறியாமையால் இந்த தவறு நடந்து விட்டதாகவும், தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…