எப்படி உருவானார் டேன்ஸிங் ரோஸ்?… சார்பட்டா பரம்பரை ஸ்பெஷல் வீடியோ….

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்து நேற்று அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டது. எனவே, வெவ்வேறு உடல்மொழி கொண்ட குத்து சண்டை வீரர்களின் கதாபாத்திரம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, டேன்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் வரும் ஷபீரின் உடல் மொழி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நெட்டிசன்களிடம் ஆர்யாவை விட இவர் பிரபலமாகிவிட்டார். 

இந்நிலையில், இப்படத்திற்கு இவர் தயாரான வீடியோ தற்போது டிவிட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Published by
adminram