
சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்துவது டிவிட்டர்தான். பிரதமர் மோடி முதல் சாமானியர்கள் வரை டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான அறிவிப்புகள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர், ரிலீஸ் தேதி அறிவிப்பு என அனைத்தையும் டிவிட்டர் மூலமாகவே ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிவிட்டரில் நடிகர் தனுஷின் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் (ஒரு கோடி) ஆக உயர்ந்துள்ளது. தமிழ் நடிகர்களில் யாரையும் இவ்வளவு பேர் பின் தொடரவில்லை. ரஜினிகாந்தின் பக்கத்தையே 5.9 மில்லியன் பேர்தான் பின் தொடர்கின்றனர். விஜயின் பக்கத்தை 3.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். சிம்புவுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ஃபாலோயர்ஸ் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.





