Connect with us

தனுஷ் புதிய படம்… இத்தனை கோடி சம்பளமா?

தனுஷ் புதிய படம்… இத்தனை கோடி சம்பளமா?

புதிய படத்திற்கு ரூ. 120 கோடி பட்ஜெட் என்றும் தனுஷின் சம்பளம் மட்டுமே ரூ. 50 கோடி என்று தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது.

b4a63632817e1febf11b50f9635ef5a2

நடிகர் தனுஷ் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவில் கலக்கி வருகிறார். தான் நடித்துவரும் ஆங்கில படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளார்.

இதற்கு இடையில் தொடர்ந்து தான் நடித்த படங்களின் ரிலீஸ் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் வெளியாகி இருந்தது.

ரிலீஸிற்கு முன் இருந்த கிரேஸ் படத்தின் ரிலீஸிற்கு பிறகு ரசிகர்களிடம் இல்லை, காரணம் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல் கதை இல்லை என்பது தான்.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் புதிய படம் குறித்து ஒரு தகவல் வந்தது. அதாவது அவர் தேசிய விருது எல்லாம் பெற்ற தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் புதிய படம் நடிக்க இருக்கிறாராம்.

புதிய படத்திற்கு ரூ. 120 கோடி பட்ஜெட் என்றும் தனுஷின் சம்பளம் மட்டுமே ரூ. 50 கோடி என்று தெலுங்கு மீடியாக்களில் கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top