15 வருடங்கள் கழித்து இணைந்த கூட்டணி… செல்வராகவன் – தனுஷ் புதிய பட மாஸ் அப்டேட்….

Published on: June 23, 2021
---Advertisement---

e820dae214fbfd752b7b1fcf730ebd80

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2  திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.  இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். 

எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படாமல் இருந்தது. தனுஷும் தொடர்ந்து வெவ்வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டே இருந்ததால் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி மீண்டும் இணையுமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

b27bb37029e5cb16cb7a4d6b9ba6a7d9

இந்நிலையில், செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் 20ம் தேதி துவங்கவுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Leave a Comment