நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். தற்போது அவரின் கையில் 3க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது. அவரின் நடிப்பில் உருவான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது ‘மாறன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ என ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பின் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது.
இந்நிலையில், மாறன் படப்பிடிப்பில் நடிக்கும் வேலையை விட்டுவிட்டு தனுஷே படத்தை இயக்கி வருகிறாராம். இது இதனால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் நரேன் கார்த்திக் தவித்து வருகிறாராம். அதேபோல், ‘திருச்சிற்றம்பலம்’ பட படப்பிடிப்பிலும் இதே கதைதானாம். ரஜினி, விஜய் போன்ற நடிகர்களே இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்து வரும்போது தனுஷ் இப்படி செய்யலாமா என தலையில் அடித்துக்கொள்கிறார்கள் திரையுலகினர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…