தர்பார் பட நஷ்டம் – விநியோகஸ்தர்களுக்கு உதவும் அதிமுக அரசு !

Published on: February 3, 2020
---Advertisement---

cd88db0b9a13854d6753e8bcd5e25dbb

தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் சொல்லி வரும் வேளையில் அவர்களுக்கு உதவ அரசு தயாராக இருப்பதாக கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தை வாங்கி வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து ரஜினியை சந்தித்து தங்களது நஷ்டத்தை எடுத்து சொல்ல சிலர் இன்று அவர் வீட்டுக்கு செல்ல முயன்றனர். ஆனால் அப்பகுதி காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதைப்பற்றி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பியபோது ’இது சம்மந்தமாக எங்களை விநியோகஸ்தர்கள் யாரும் அணுகவில்லை. இதுபோன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிறார். விநியோகஸ்தர்கள் அவர்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுவோம். தீர்வுகளைக் காண்பதற்கும் அரசு உதவும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment