நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் பிரிமியர் காட்சி ஜனவரி 8 ஆம் தேதியே அமெரிக்காவில் வெளியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இதில் ரஜினியோடு நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி பிரிமியர் காட்சி வெளியாக உள்ளது. தர்பார் படத்தை அமெரிக்காவில் பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இன்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தர்பார் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனால் அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…