சவுதியில் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த தங்கள் மகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தஞ்சையைச் சேர்ந்த பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தஞ்சையைச் சேர்ந்த யாகப்பா மற்றும் பவுலின் மார்த்தாள் ஆகியோரின் மகள் இமாகுலேட்டா. இவர் குடும்ப வறுமை சூழல் காரணமாக சவுதி அரேபியாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் கம்ப்யூட்டர் சம்மந்தமான வேலை என்று சொல்லி அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கு வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால் தனது பெற்றொருக்கு போன் செய்து புலம்பியுள்ளார். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். ஒருவருடம் கழித்து அவரது உடல் இந்தியா எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது தங்கள் மகள் உயிரோடு இருக்கிறாள் என்று இமாகுலேட்டாவின் பெற்றோர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சவுதியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த 23 தமிழ்ப் பெண்கள் பற்றிய வீடியோ செய்தியில் தங்கள் மகளும் இருப்பதாக இமாகுலேட்டாவின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் கடிதத்துக்கு எந்த வித பதிலும் இல்லாததால் இப்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…