இரண்டாவது திருமணம் செய்ய மறுத்த மகள் –  கோபத்தில் கொலை செய்த தந்தை !

மதுரையில் முதல் கணவரை பிரிந்து வாழும் தன் மகள் இரண்டாவது திருமணம் செய்ய மறுத்த காரணத்தினால் தன்னை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்திருக்கும் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மூத்த மகனான ரிஸ்வான் அவனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார் . அவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த இரு வருடங்களாக தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பானுவின் எதிர்காலம் கருதி அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள சொல்லி இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பானு மறுக்கவேஇருவருக்குமிடையில் இது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இதுபோலவே இஸ்மாயில் மகளிடம் திருமணம் சம்பந்தமாக பேச இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் கோபமான இஸ்மாயில் இறைச்சி வெட்டும் அரிவாளால் தனது மகளின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசார் நடத்திய விசாரணையில் தலைமறைவாக இருந்த இஸ்மாயில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Published by
adminram