150 கோடியில் தனுஷ் கட்டும் பிரம்மாண்ட வீடு…. வாயை பிளக்கும் சினிமா உலகம்…

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்புக்கு தீனி போடும் அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும், ஒரு பக்கம் பட்டாஸ், ஜகமே தந்திரம் போன்ற கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். அதுவும் தற்போது தொடர்ச்சியாக படங்களை கமிட் செய்து வைத்துள்ளார். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் 3 படங்கள் ஒப்பந்தம் போட்டு இரவு பகலாக நடித்து வருகிறார். இதுவெல்லாம் எதற்கு என்பது தெரியவந்துள்ளது. 

போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டிருக்கு அருகே ஒரு புதிய வீட்டை அவர் கட்டி வருகிறார். இந்த வீட்டின் வேலை துவங்கியது போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வருடமே வெளியாகி வைரலாகியது. தற்போது அந்த வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சுமார் ரூ.150 கோடி செலவில் தனுஷ் அந்த வீட்டை கட்டி வருகிறாராம். 8 கிரவுண்டு நிலம் மட்டும் ரூ.80 கோடியாம். ரூ.70 கோடி செலவில் அவர் வீட்டை கட்டி வருகிறாராம். அதற்காகத்தான் இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறாராம். அதிலும், அவர் நடிக்கவுள்ள தெலுங்கு படத்திற்கு அவருக்கு ரூ.30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா நடிகர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வீடு கட்டி வருகின்றனர். விஜய், சூர்யா வரிசையில் தற்போது தனுசும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram