
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு பாடலாகும். இப்பாட்டை கேட்டாலே அனைவருக்கும் குத்தாட்டம் போட தோன்றும். அதிலும், இப்பாடலுக்கு விஜய் ஆடிய நடன அசைவுகள் மிகவும் பிரபலம். இப்படாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்பாடலுக்கு பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டனர். பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டினர் என பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதிலும், டிவியில் விஜய் ஆடுவதை பார்த்துக்கொண்டே அவரைப்போலவே நடனம் ஆக முயற்சிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.