சம்பளமா? அப்புறம் பார்த்துக்கலாம்.. ரஜினி முதல் அனைத்து நடிகர்களையும் மடக்கிய நிறுவனம்

by ராம் சுதன் |
சம்பளமா? அப்புறம் பார்த்துக்கலாம்.. ரஜினி முதல் அனைத்து நடிகர்களையும் மடக்கிய நிறுவனம்
X

உண்மையிலேயே டான்தான்: ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களையே தயாரித்து வந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து அடுத்தடுத்து கொஞ்சம் மேலே மேலே போகிற மாதிரி இருக்கிறது. எங்கேயோ ஓரிடத்தில் ஓரமாக இருந்த நிறுவனம் தான் டான் பிக்சர்ஸ் நிறுவனம். அதனுடைய புரடக்சன் கம்பெனி கூட மிக சிறியது என்று தான் கூறி வந்தார்கள். ஆனால் இப்போது அடுத்தடுத்து பெரிதாக அது போய்க்கொண்டே இருக்கின்றது. முதலில் அந்த நிறுவனத்தைப் பற்றி தெரியாதவர்கள் யாரோ ஒரு நிறுவனம் புதுசா வர்றாங்க என்றுதான் நினைத்திருந்தார்கள்.

எப்படி கால்ஷீட் கொடுத்தாங்க?: இவருக்கு எப்படியா டேட் கொடுத்தார் சிவகார்த்திகேயன்? எப்படி தனுஷ் டேட் கொடுத்தார் என பல பேர் நினைத்து இருப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு வலுவான பின்னணி இருக்கிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கவின் கேர் ரங்க நாதனின் மகளை திருமணம் செய்தவர். இவர்களுக்கு வலுவான ஒரு குடும்ப பின்னணியும் இருக்கிறது.

மண்டியிடும் முன்னணி நடிகர்கள்: இன்னொரு பக்கம் ஒரு அரசியல் பின்புலமும் இருக்கிறது. அதனால் இன்று பெரிய ஹீரோக்கள் உடனடியாக கால்ஷீட் தரக்கூடிய நிறுவனமாகவும் இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல மற்ற தயாரிப்பாளர்களிடம் எனக்கு இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என வெட்டு உண்டு துண்டு ரெண்டு என்பது போல் பேசும் நடிகர்கள் எல்லாம் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குள் வந்துவிட்டால் சம்பளம் அப்புறம் பேசிக் கொள்ளலாம், பிராஃபிட் ஷேர் வாங்கிக்கிறேன் என்ற அளவுக்கு இறங்கி வந்து கால்ஷீட் கொடுத்து வருகிறார்கள்.

செல்வாக்கு பெருசு: இதை வைத்தே டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் செல்வாக்கை நாம் புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படங்களும் அடுத்தடுத்த லெவலுக்கு போய்க்கொண்டிருக்கிறது .எதிர்காலத்தில் இன்னும் நிறைய சர்ப்ரைஸ்கள் எல்லாம் காத்திருக்கின்றன. தமிழில் இருக்கிற அத்தனை நடிகர்களின் கால்சீட்டுகள் கூட இந்த நிறுவனத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அந்த பேச்சு வார்த்தையும் போய்க் கொண்டிருக்கின்றது. இன்று தமிழில் லைக்கா நிறுவனத்திற்கு என ஒரு பெரிய பெயரும் புகழும் இருக்கிறது. பெரிய தயாரிப்பு நிறுவனம் லைக்கா என்றுதான் இன்று வரை அனைவரும் கூறி வருகிறார்கள். ஆனால் இன்னும் அடுத்த இரண்டு வருடங்களில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க போகிறது.

அந்த அளவுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாக எடுத்து வைக்கிறது இந்த நிறுவனம். ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கூட ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் குவிந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. சின்ன இயக்குனர்களில் இருந்து பெரிய இயக்குனர்கள் வரை அனைவருமே அவருடைய திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .இந்த நிலையில் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இப்போது களம் இறங்குகிறார் ஆகாஷ் பாஸ்கரன். தற்போது அதர்வாவை வைத்து இதயம் முரளி என்ற படத்தை இயக்குகிறார் ஆகாஷ் பாஸ்கரன். அந்த படத்தின் போஸ்டர் தான் இன்று வெளியாகி இருக்கிறத. இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

Next Story