தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்புவது உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் ஏ பி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வாரியத்துடன் எழுந்த பிரச்சனைகள் காரணமாகவே அவர் விலகினார் என சொல்லப்பட்டது.
அதையடுத்து 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வாரியம் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்று உலகக்கோப்பையில் இருந்து விலகியது. வாரியத்திலும் மாற்றம் ஏற்பட்டு கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் டிவில்லியர்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணிக்குத் திரும்ப கொண்டுவர சம்மதிக்க வைத்துள்ளனர். இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிகிறது. அதேப்போல மற்றொரு இன்ப அதிர்ச்சியாக அவர் ஒருநாள் போட்டியும் இன்னும் தனக்கு முடிந்துவிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸின் ரி எண்ட்ரி அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…