சிறையில் இரு தரப்புக்கு இடையே பயங்கர மோதல் – 13 பேர் பலி !

பனாமாவில் உள்ள ஜோயிட்டா சிறையில் நடந்த மோதலில் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பனாமாவில் உள்ள ஜோயிட்டா சிறையில் உள்ள கைதிகள் இரு தரப்பாக பிரிந்து நேற்று முன் தினம் தாக்கிக் கொண்டனர். மோதலின் போது இரு தரப்பும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 13 பேர் பலி ஆகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறைக்குள் எப்படி துப்பாக்கி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் சிறை அதிகாரிகள் எடுக்கப்படும் என அதிபர் சொல்லப்படுகிறது.

Published by
adminram