More

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு!

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் , அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிறுவன் சிறார் ஜெயிலில் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையாகிவிட்டார். ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார்

Advertising
Advertising

அதன்பின்னர் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டது.  

இருப்பினும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஆகிவந்த நிலையில் தற்போது நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு வாரண்ட் பிறப்பித்தது டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதன்படிஜனவரி 22ம் தேதி, காலை 7 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Published by
adminram