எல்.ஐ.சி பங்குகளை விற்க முடிவு.. தனியார் கைக்கு போகிறதா? பொதுமக்கள் அச்சம்

நடப்பு நிதியாண்டு (2020-2021) பட்ஜெட்டை மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, அவர் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த வகையில், சில நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் முதலீட்டை திரும்ப பெறும் பட்டியலில் ஆயுள் காப்பீடு நிறுவன்மும் (எல்.ஐ.சி ) இணைக்கப்படும் என அவர் அறிவித்தார். மேலும், அந்நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். 

இதைத்தொடர்ந்து ஏற்கனவே, ரயில்வே, விமானத்துறை ஆகிய துறைகளை தனியார் வசம் ஒப்படைப்பதை மத்திய அரசு பரீசீலித்து வரும் நிலையில், தற்போது எல்.ஐ.சியும் தனியார் வசம் சென்று விடுமோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Published by
adminram