ஒரு டிக்கெட்டை எத்தனை பேர்தான் கேன்ஸல் செய்வீர்கள் ? - தீபிகா படுகோனேவுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் காமெடி !

18f680dff355b0df4e0aa6dc3aeeed5b-1

ஜே என் யு போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவளித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தைப் புறக்கணிப்போம் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

ஜே என் யு வில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியது. இதனால் மாணவர்களின் போராட்டம் நாடு தழுவிய கவனம் பெற்றது. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மாணவர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு ஆதரவளித்தார்.

20a-1

அதையடுத்து பாஜகவினர் மற்றும் வலதுசாரி அமைப்பினர் தீபிகா படுகோனேவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக தீபிகா நடித்து விரைவில் வெளியாக உள்ள சப்பாக் என்ற திரைப்படத்தின் ரிசர்வ் செய்த டிக்கெட்டினைக் கேன்சல் செய்வதாக சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்தார். இதையடுத்துப் பலரும் அதுபோல தாங்களும் டிக்கெட்டை கேன்ஸல் செய்வதாக அறிவித்தனர்.

ஆனால் அதில் காமெடி என்னவென்றால் ஒரே டிக்கெட்டை பலரும் கேன்சல் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்ததுதான். ஏற்கனவே இதுபோல பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பாகமதி என்ற திரைப்படம் ஓடிய தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story