நடிகையின் செல்போன் எண்ணை ஆபாச குரூப்பில் போட்ட டெலிவரி பாய் – சென்னையில் அதிர்ச்சி

அவருக்கு வாட்ஸ் ஆப்பில் மேசேஜ் அனுப்பிய மூவரை அழைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆபாச வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் குரூப்பில் ஒருவர் அவரின் செல்போன் எண்ணை பகிர்ந்து அவர் பாலியல் தொழிலாளி எனக்கூறியதால் அவரை தொடர்பு கொண்டேம் எனக்கூறினார். மேலும், டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பவரே காயத்ரியின் எண்ணை அந்த குரூப்பில் பகிர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காயத்ரி ஆர்டர் செய்த பீட்சாவை டெலிவரி செய்யும் போது அவருக்கும், பரமேஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதனால் கோபமடைந்து அவர் இப்படி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த தகவலை நடிகை சமூக வலைத்தளங்களில் பகிர பீட்சா நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது.

Published by
adminram