ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாத்த படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிக்கு கதை சொன்ன அதேநேரத்தில், விஜய்க்கும் ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம் தேசிங்கு பெரியசாமி. அவர் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட ரஜினி படத்தை முடித்துவிட்டு வாருங்கள் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறியுள்ளாராம்.
எனவே, ரஜினி, விஜய் என படங்கள் கிடைத்து வருவதால் குஷியில் இருக்கிறாராம் தேசிங்கு பெரியசாமி…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…