நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் வசூலில் சாதனை செய்த தர்பார்

Published on: January 10, 2020
---Advertisement---

cd88db0b9a13854d6753e8bcd5e25dbb

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூபாய் 2.27 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அதேபோல் தமிழகத்தில் இந்த படம் ஒரே நாளில் 34.5 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது 

மேலும் திருச்சியில் நேற்றைய முதல் நாளில் ரூ. 42.2 லட்சம் வசூல் செய்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்

சென்னையில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இரண்டு கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்வது என்பது இதுதான் முதல் முறை என டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

நேற்று விடுமுறை நாளாக இல்லாத நிலையிலும் இந்த வசூல் சாதனை என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இவ்வளவிற்கும் இந்த படத்திற்கு நேற்று முதல் காட்சி முடிந்த உடனே நெகடிவ் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

நடுநிலை ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவே கருத்து தெரிவித்தனர். இருப்பினும் முதல் நாளில் இந்த படம் வசூல் சாதனை செய்துள்ளது என்பதும் அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு முடிவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Comment