
மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இதைத்தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் தயரானது. விஷால் தயாரிக்க மிஷ்கின் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் விஷால், கவுதமி, ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். படம் பாதி முடிந்த நிலையில் மீதி படத்தை முடிக்க மிஷ்கின் ரூ.40 கோடி வேண்டும் எனகேட்டதால் கோபமடைந்த விஷால் மிஷ்கினை தூக்கி விட்டு தானே இப்படத்தை இயக்குவது என முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ‘நான் 40 கோடி கேட்கவில்லை. 400 கேடி கேட்டேன். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ.100 கோடி. ஏனெனில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கிறார்’ என கிண்டலாக பதிலளித்துள்ளார். இதிலிருந்து துப்பறிவாளன் 2 குறித்து வெளியான செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது.





