விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 – அப்போ மிஷ்கின் என்ன ஆச்சு?

மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இதைத்தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் தயரானது. விஷால் தயாரிக்க மிஷ்கின் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் விஷால், பிரசன்னா, கவுதமி, ரகுமான் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பட்ஜெட் மற்றும் வேறு சில காரணங்களால் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இப்படத்திலிருந்து வெளியேற மிஷ்கின் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அவர் வெளியேறினால் மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
adminram