தேவதாசி முறை செம சூப்பர்…. வசமாக மாட்டிய சின்மயியின் தாய்

வைரமுத்து, ராதாரவி உள்ளிட்ட பலரின் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு புகார்களை கூறியவர் பாடகி சின்மயி. அவருக்கு ஆதரவாக அவரின் கருத்தை அவரின் தாயார் பத்மஷ்னியும் ஆதரித்திருந்தார்.  அந்த சம்பவத்திற்கு பின்னும் தற்போது வரைக்கும் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற சின்மயியின் தாய் பத்மஷ்னி ‘ தேவதாசி முறை ஒட்டு மொத்த பாரத தேசத்துக்கும் சொந்தமானது. அது எப்பேர்பட்டது தெரியுமா? அதை இல்லாமல் செய்த பெரியாரை நான் எப்போதும் மன்னிக்க மாட்டேன்’ என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்களும் பலரும் அவருக்கு எதிராக சின்மயியின் டிவிட்டர் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Published by
adminram