More

காலத்தால் அழியாத பக்தி படங்கள்

பக்தி என்றாலே பயபக்தியுடன் கோவிலுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டி வணங்க வேண்டும். நமக்காக மட்டுமல்லாமல், ஊரும், நாடும், உலகமும் செழிக்க வேண்டும் என்று வணங்குதலே சாலச்சிறந்தது. ஏதாவது கஷ்டம் வந்தால் மட்டும் கோவிலுக்குச் சென்று சாமியைக் கும்பிடுவது அல்ல பக்தி. எந்நேரமும் இறைவனின் திருநாமத்தை நினைத்தவாறே எல்லா செயல்களிலும் ஈடுபட வேண்டும். அதுதான் பக்தி. கோவிலுக்குச் சென்றதும் வீட்டு நினைப்பு வரக்கூடாது. இதற்கு வேறெங்காவது போயிருக்கலாமோ என்றும் எண்ணக்கூடாது. இப்படி நினைத்தவாறு இறைவனை வணங்குவதால் பயன் ஒன்றுமில்லை. இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுதான் அன்று முதல் இன்று வரை தமிழ்சினிமாவில் பக்தி திரைப்படங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில பக்திபடங்களைப் பற்றி பார்க்கலாம். 

மகாகவி காளிதாஸ், கந்தன் கருணை, குழந்தையும் தெய்வமும், சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஆடிவெள்ளி, மேல்மருவத்தூர் அற்புதங்கள், தெய்வம், சரஸ்வதி சபதம், திருவிளையாடல்

குழந்தையும் தெய்வமும் 

1965ல் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் வெளியான பக்தி திரைப்படம் குழந்தையும் தெய்வமும். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஜெமினிகணேசன், ஜமுனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் பாடல்கள் அனைத்தும் இனிமையானவை. ‘கோழி ஒரு கூட்டிலே”, ‘அன்புள்ள மான் விழியே…”, ‘நான் நன்றி சொல்வேன் …” ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.

மகாகவி காளிதாஸ்;

1966-ல் ஆர்.ஆர்.சந்தின் இயக்கத்தில் சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி நடிப்பில் வெளியான பக்தி திரைப்படம். கே.வி.மகாதேவனின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் நம்மையும் கூடவே சேர்ந்து பாட வைக்கும் ரகங்கள். 

காளிதாஸ் ஒரு ஏழைக்குடியானவன். தனது சிறு வயது முதலே காளி தேவியின் பக்தனாக இருக்கிறான். அதேநேரம் இவன் ஒரு முட்டாளாகவும் இருக்கிறான். திடீரென ஒருநாள் அரச சபையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி தொடங்குகிறது. அதில் கலந்து கொண்டு காளியின் அருளால் அவன் கவிச்சக்கரவர்த்தி ஆகிறான். பின்னர் தொடர்ந்து காளிதேவி கோவிலில் சென்று பாடி பாடி அவனே மகாகவி காளிதாஸ் ஆகிறான். 

‘காலத்தில் அழியாத காவியம் தர வந்த…”, ‘மாணிக்க வீணையே…”, ‘மலரும் வான் நிலவும”;, ‘சென்று வா மகனே சென்று வா…அறிவை வென்று வா மகனே வென்று வா…”, ‘யார் தருவார் இந்த அரியாசனம”;, ‘கல்லாய் வந்தவன் கடவுளம்மா….”ஆகிய காலத்தால் அழியாத காவிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 

கந்தன் கருணை: 

1967ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான பக்தி திரைப்படம் கந்தன் கருணை. சிவாஜிகணேசன், சாவி;த்ரி, ஜெமினிகணேசன், சிவகுமார், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ஆகியோர் நடித்த படம். கே.வி;.மகாதேவன் இசை அமைத்தார். முருகக்கடவுளின் பிறப்பு அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு பழனி சென்றது, சூரபத்மனை வதம் செய்தது, வள்ளி, தெய்வானையுடன் திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கொண்டு கதைக்கருவாக எடுக்கப்பட்ட படம்.

சம்பூர்ண ராமாயணம் 

1958ல் வெளியான இப்படம், வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சிவாஜி, என்.டி.ராமராவ், பத்மினி, தி.க.பகவதி, பி.வி.நரசிம்மபாரதி, சித்தூர் வி.நாகையா, எஸ்.வி.ரங்கராவ், ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைக்க எம்.ஏ.வேணு தயாரித்திருந்தார். கே.சோமு இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

லவகுசா 

1963-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சி.புள்ளையா இயக்கினார். என்.டி.ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினிகணேசன், எம்.ஆர்.ராதா, காந்தாராவ், நாகையா, எஸ்.வரலெட்சுமி, கண்ணாம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். மருதகாசியி;ன் பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆகியோர் பாடினர். திரைக்கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, ஏ.கே.வேலவன் வசனம் எழுதினார். இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 
 
ஆடிவெள்ளி 

1990-ல் வெளியான இப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். நிழல்கள் ரவி, சீதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சந்திரசேகர், ஒய்.விஜயா ஆகியோர் உடன் யானையும், பாம்பும் நடித்திருந்தன. இந்த படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயர். இப்படத்தில் ‘ஆயி மகமாயி..”, ‘சொன்ன பேச்ச கேக்கணும”;, ‘வெள்ளிக்கிழமை ராமசாமி” ஆகிய பாடல்கள் இனிமையானவை. இப்படத்திற்காக அன்றைய காலத்தில் வேப்பிலை தோரணம் கட்டி, கூழ்காய்ச்சி ஊற்றப்பட்டு தியேட்டர்கள் கோவிலாக மாறின. 

Advertising
Advertising

சீதாவுக்கு யானை, பாம்பு தான் ஆதரவு. தெய்வபக்தி மிகுந்தவள். நிழல்கள் ரவி மற்றும் அவரது நண்பர்கள் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவர். இதை யானை பாம்பு துணையுடன் சீதா எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. தமிழ்சினிமா கிராபிக்ஸில் முன்னேறாத காலகட்டத்தில் கிளைமாக்ஸில் பிரமிப்பாக காட்டியிருப்பார். படத்தில் ராமநாராயணன் கிங் கட்டாரி என்ற ஒரு பெரிய மிருகத்தை அழிக்க சீதா வளர்க்கும் பாம்பை அனகோண்டாவாக மாற்றி இருப்பார். ரசிகர்கள் அந்தக்காட்சியை வாயைப் பிளந்து பார்ப்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம். பெண்கள் கூட்டம் அலைமோதிய படம் இதுதான். 

மேல்மருவத்தூர் அற்புதங்கள் 

இப்படம் 1986ல் வெளியான பக்தி திரைப்படம். ஜா.குருமூர்த்தி தயாரிப்பில் திரைக்கதை எழுதி, ஜகதீசன் இயக்கிய இப்படத்தில், ராஜேஷ், சுலக்சனா, நளினி, ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். சக்திதாசன் சி.கணேசன் கதை எழுதினார். கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மகிமைகளை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

தெய்வம் 

1972-ல் எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் தயாரிப்பில், வெளியான இப்படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். கிருபானந்த வாரியார், ஜெமினிகணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். முருகனின் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தில் நடைபெற்றதைப் போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப் போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் நிவர்;த்தி செய்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. 

மதுரை சோமுவின் ‘மருதமலை மாமணியே முருகையா…”, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தரராஜன் இணைந்து பாடிய ‘திருச்செந்தூரின் கடலோரத்தில”; பாடலும், பெங்களுர் ரமணியம்மாள் பாடிய ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்” பாடலும், சூலமங்கலம் கோதரிகளின் ‘வருவாண்டி தருவாண்டி மலையாண்டி” ஆகிய பாடல்களும் இப்படத்தில் தான் இடம்பெற்றன. இப்படப் பாடல்கள் அனைத்தும் தற்போதும் கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கியில் போடப்படுகிறது. 

சரஸ்வதி சபதம் 

1966-ம் ஆண்டு வெளிவந்த படம் சரஸ்வதி சபதம். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சிவகுமார், ஜெமினிகணேசன், ஹரநாத் ஆகியோர் நடித்துள்ளனர். கண்ணதாசன் பாடல்கள் எழுத, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்;தார். ‘அகர முதல எழுத்தெல்லாம்”, ‘தெய்வம் இருப்பது எங்கே”, ‘கல்வியா செல்வமா, வீரமா…”, ‘கோமாதா எங்கள் குலமாதா”, ‘ராணி மகாராணி….”, ‘தாய் தந்த பிச்சையிலே..”, ‘உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி” ஆகிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பட வசனம் பிரபலமானது. அதனால், இப்படம் வெளியானதும் கிராமங்களில் திருவிழாக்களின்போது இந்த படத்தின் வசனத்தை ஒலிபரப்புவது வழக்கமானது. நாரதராக வரும் சிவாஜிகணேசன் பலவித கெட்அப்புகளுக்கு மத்தியில் வசனங்களை தெளிவான உச்சரிப்புடன் பக்கம் பக்கமாக பேசியிருப்பது ரசிகர்களின் வாயைப் பிளக்க வைத்தது. உலகில் சிறந்தது கல்வியா, செல்வமா, வீரமா என முப்பெரும் தேவியர்களுக்குள் விவாதம் நடக்கும் போது சிவாஜி ஒவ்வொருவருக்கும் ஏற்ப பதில் சொல்லிவிட்டு கடைசியில் ஆம்…தேவி…என்று பயந்தபடி சொல்வது ரசிக்க வைக்கும். 

திருவிளையாடல் 

1965ல் வெளியான இப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவாஜிகணேசன், சாவித்ரி, முத்துராமன், நாகேஷ், தேவிகா, மனோரமா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், ஏ.பி.நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திருவிளையாடல்புராணத்தில் மொத்தமுள்ள 64 தொகுப்புகளில் 4 தொகுதிகளை மட்டும் தொகுத்து திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். நாகேஷ் தருமியாக வரும் காட்சி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். பாடல்கள் பத்து. அத்தனையும் முத்து. ‘பழம் நீயப்பா..ஞானப்பழம் நீயப்பா..,” ‘இன்றொரு நாள் போதுமா…”,  ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை”, ‘பார்த்தால் பசுமரம்…”, ‘பொதிகை மலை உச்சியிலே….”, ‘ஒன்றானவன்…உருவில்…” உள்ளிட்ட 10 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 1965ல் அதிகளவில் வசூலித்து சாதனை புரிந்தது இப்படம்தான். இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: வே.சங்கரன்

Published by
adminram

Recent Posts