
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. இப்படம் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். விஜயின் அடுத்த திரைப்படத்தில் இவர்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் கூட ஒரு விழாவில் அவருக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்து விட்டு ஓடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் அவர் கொடுத்த ஒவ்வொரு போஸுக்கும் காமெடி நடிகர் வடிவேலுவின் ரியாக்ஷனை ஓப்பிட்டு மீம்ஸ் போட்டு கலாய்த்தனர்.

அவர் கொடுத்த போஸ் அத்தனைக்கும் வடிவேலுவின் போஸ் அப்படியே ஒத்துப்போவதுதான் நம்பை ரசிக்க வைக்கிறது.






