1. Home
  2. Latest News

கடவுள்தான் சினிமாவ காப்பாத்தணும்.. இதெல்லாம் வேணானுதான் அஜித் நினைச்சாரு


மாஸா ரிலீஸான விடாமுயற்சி: கடந்த6 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் , திரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா என பல நடிகர்கள் நடித்துள்ள விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் படத்தை எப்போதும் போல இருக்கும் அஜித் படம் போல் நினைத்து பார்க்க வராதீர்கள் என்றுதான் மகிழ்திருமேனி ஆரம்பத்தில் இருந்து கூறியிருந்தார்.

கண்டெண்டுக்கு ஏது மதிப்பு?: ஆனால் ரசிகர்களின் எண்ணத்தை மாற்றமுடியுமா? அஜித்துக்கு உண்டான ஓப்பனிங் சீன் இருக்கும், மாஸான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்றேதான் ரசிகர்கள் படத்தை பார்க்க வந்தனர். ஆனால் அதுதான் படத்திற்கு பெரிய மைனஸாக மாறியது. படத்தை பொறுத்தவரைக்கும் நல்ல கதையம்சம் கொண்ட படம்தான். ஆனால் ரசிகர்களின் ஓவர் எதிர்பார்ப்பால்தான் படத்திற்கு பெரிய நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியது.

இதுதான் ஹீரோயிசமா?: அதுவே படத்தின் வசூலையும் பாதித்தது. நிறைய பேர் படம் பார்த்து ‘ஏன் இந்தப் படத்திற்கு இவ்ளோ நெகட்டிவிட்டி பரப்புகிறார்கள் என தெரியவில்லை’ என்றுதான் கூறி வருகிறார்கள். பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் கூட படத்தில் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஒரு 100 பேரை சாவடித்தால்தான் ஹீரோயிசம் என்று எண்ணுகிறார்கள்.

கடவுள்தான் காப்பாத்தணும்: அதைத்தான் அஜித் வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் ரசிகர்கள் எல்லாரையும் சாவடிக்க வேண்டும். அதுதான் படம் என்று எண்ணி வருகிறார்கள். இப்படி நினைக்கிறவர்கள் இருக்கும் வரை விடாமுயற்சி படம் போன்ற எதிர்காலத்தில் வரும் நல்ல கண்டெண்ட் உள்ள படங்களுக்கு ஆபத்துதான். சினிமாவை கடவுள் காப்பாத்தணும் என தனஞ்செயன் கூறினார்.


ஏன் ஆக்‌ஷன் ஹீரோக்கள் கண்டெண்ட் உள்ள படங்களில் நடித்தால் ரசிகர்கள் ஒத்துக் கொள்வதில்லை என்று தெரியவில்லை. ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அனிருத்தின் பிஜிஎம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே தான் இருந்தன. கதைனு படத்தில் எதுவும் இல்லை. ஆனால் அந்தப் படங்கள் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டன. இதிலிருந்தே தெரிகிறது தமிழ் சினிமா எங்கு சென்று கொண்டிருக்கிறது? எதை கற்றுக் கொடுக்கிறது என்று. உண்மையில் கடவுள்தான் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.