
தனுஷ் நடித்திருக்கும் 40வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என்பதும், 41 வது படம் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் என்பதும், 42வது படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவிருக்கும் படம் 44வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருக்கும் படம் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள 43வது படம் என்ன என்பது குறித்த தகவல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்த போது அந்தப் படம்தான் ’தலைவர் 169’வது படம் என்றும் அந்த படத்தை தனுஷ் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது
ஆனால் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி தனுஷ் 43 வது படம் ரஜினிகாந்த் படம் இல்லை என்று கூறப்படுகிறது. தனுஷின் 43 வது படத்தை ஏற்கனவே அவரை வைத்து இரண்டு பாலிவுட் படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்க இருப்பதாகவும் ஆனால் இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அவர் தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் என்றும் கூறப்படுகிறது
எனவே தனுஷின் 43 வது படத்தில் நம்மூர் சூப்பர் ஸ்டார் நடிக்கவில்லை என்பதும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் தான் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனுஷின் 45வது படத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தனுஷின் கால்ஷீட் டைரி 2020ஆம் ஆண்டு இறுதிவரை நிரம்பி விட்டதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்



