மூணு மணி நேரமா கதை சொன்ன தனுஷ்... எந்த ரியாக்ஷனுமே காட்டாத தயாரிப்பாளர்

by ராம் சுதன் |

தனுஷ் 'ராயன்' என்ற பெயரில் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லாஞ்ச் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இசை அமைப்பாளரும் விழாவின் கதாநாயகனுமான ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தனுஷ் உடன் இணைந்து பாடல் பாடி அசத்தினார்.

படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். படத்தைப் பற்றி தனுஷ் ஆடியோ லாஞ்சில் இவ்வாறு பேசினார்.

நான் வந்தப்போ ஒல்லியா கருப்பா, அசிங்கமா எந்த டேலன்டும் இல்லாம தான் வந்தேன். ஆனா எங்கிட்ட எதைப் பார்த்து கனெக்ட் பண்ணிக்கிட்டீங்கன்னு தெரில. இத்தனை வருஷமா தூக்கி வச்சி அழகு பார்க்குறீங்க.

சரியா இங்கிலீஷ் கூட பேசத் தெரியாது. என்னை இங்கிலீஷ் படத்துல நடிக்க வச்சி அழகு பார்க்கறீங்க. 50வது படம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் உங்களுக்கு எதாவது பண்ணனும்னு தோணுச்சு. என்னால உங்களுக்கு உழைக்க மட்டும் தான் முடியும். அதனால தான் இந்த 50வது படத்தை நானே டைரக்ட் பண்ணனும்னு நினைச்சேன்.

இந்தப் படம் ராயன் உங்களுக்கான டெடிகேஷன். இந்தப் படம் இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்க முக்கியமான காரணம் என்னோட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சார். அவருக்குக் கதை சொல்றது ரொம்ப கஷ்டம். மூணு மணி நேரமா கதை சொல்றேன்.

காமெடியான கதை எல்லாம் நானே நடிச்சிக் காட்டி சொல்றேன். அவரு சைடுல எந்த ரியாக்ஷனும் இல்ல. த்ரில்லிங்கான சீனுலாம் சொல்றேன். அப்படியே திரில்டா கதை சொல்றேன். அவரு சைடுல எந்த எக்ஸ்பிரஷனும் இல்ல. டுவிஸ்ட், டர்ன்னுன்னு என்னென்னமோ சொல்லிட்டு அவரைப் பார்க்குறேன். அவருக்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்ல.

போகப் போகப் போக எனக்கு நம்பிக்கைக் குறைஞ்சிக்கிட்டே வருது. நம்ம கதை நல்லா இல்ல போலன்னு நினைச்சிட்டேன். மூன்றரை மணி நேரம் ஃபுல்லா கேட்டாரு. டக்னு எழுந்து கைகொடுத்தாரு. சூப்பர் தனுஷ் பண்ணலாம்னாரு. நான் கேட்டதை விட அதிக பட்ஜெட்டும் கொடுத்தாரு. அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story