ரஜினியை அடுத்து தனுஷ் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்

Published on: January 13, 2020
---Advertisement---

b4a63632817e1febf11b50f9635ef5a2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்சய்குமார் மற்றும் தனுஷ் நடிக்கும் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’ராஜண்ணா’ என்ற பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் இந்த படத்தில் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் தனுசுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷூடன் சாரா அலிகான், அக்சய்குமார், உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் அமைய உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை ஆனந்த் எல் ராய் தொடங்கி விட்டதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment