More

அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன -மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் !

தமிழ் சினிமாவின் ஹிட் காம்போவில் ஒன்றாக இருந்த தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மீண்டும் இணைவ்யவுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் தனுஷால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இருவரும் அவர்களின் பாதையில் மிகவேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றனர்.இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த போது தான் தயாரிக்கும் படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.

அதன் பிறகு சிவகார்த்திகேயனும் அனுருத்தும் தனுஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவரிடம் இருந்து பிரிந்தனர். ஆனால் அவர்கள் காமபினேஷனை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் அதை உறுதி செய்யும்விதமாக அனிருத் பேசியுள்ளார்.

சமீபத்தில் அனிருத் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நாங்கள் வேண்டுமென்றே தான் பிரேக் எடுத்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக காலம் பிரேக் நீடித்துவிட்டதால் பல கதைகள் உருவாகிவிட்டன. நாங்கள் மீண்டும் இணைவதற்கான வேலைகள் தொடங்கி விட்டன’ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram