More

சூர்யாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த தனுஷ்!

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

Advertising
Advertising

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா-ராதாமோகன் இணையும் படத்தின் டைட்டிலை இன்று காலை 11 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுவார் என ஏற்கனவே எஸ் ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அறிவிப்பின் போது அவர் தனுஷை தளபதியின் திரையுலக தம்பி என குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலானோரும் இதற்கு பாசிட்டிவ் கமெண்டுகளையும் ஒருசிலர் நெகட்டிவ் கமெண்டுகளையும் அளித்து வந்தனர் 

இந்த நிலையில் தளபதியின் திரையுலக தம்பியான தனுஷ் சற்று முன்னர் எஸ்ஜே சூர்யாவின் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திர்கு ‘பொம்மை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொம்மை என்ற டைட்டிலில் கடந்த 1964ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 

ராதாமோகன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் ஒரு திரில் படம் என்றும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருவரும் ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே

Published by
adminram

Recent Posts