சன் பிக்சர்ஸோடு கூட்டணி அமைத்த தனுஷ் – நான்காவது முறையாக இணையும் இயக்குனர் !

by adminram |

8cae980150ff61d7bf2ca74c32b1e97f-2

நடிகர் தனுஷ் தனது 44 ஆவது படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 40 ஆவது படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின் செல்வராகவன் இயக்கும் படத்திலும், அதன் பின் ராட்சசன் ராம்குமார் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து அவர் நடிக்கும் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்தை அவரது நீண்டகால நண்பரான மித்ரன் ஆர் ஜவஹர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

Next Story