போயஸ் கார்டன பத்தி பேசின நீங்க சுசிலீக்ஸ் பத்தி ஏன் பேசல.. எல்லாமே பப்ளிசிட்டியா..? வெளுத்து வாங்கிய பிரபலம்..!
தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வரும் தனுஷ் தற்போது இயக்குனராகவும் அசதி வருகின்றார். தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருக்கின்றார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. முதல் நாள் முதல் சோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார்.
இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
அதில் நடிகர் தனுஷ் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதிலும் குறிப்பாக போயஸ் கார்டன் வீடு பற்றி பேசியிருந்தார். இது பெரிய அளவில் வைரலானாது. போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு கட்டக்கூடாதா? எனக்கெல்லாம் தகுதி இல்லையா? என்று பேசிய அவர் 16 வயதில் ஆசைப்பட்ட வெங்கடேஷ் பிரபுவுக்கு இப்போது இருக்கும் தனுஷ் கொடுக்கும் பரிசு தான் அந்த போயஸ் கார்டன் வீடு என்று பேசியிருந்தார்.
அதைப் பார்த்த பலரும் அந்த ஆடியோ லாஞ்சில் அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி தனது பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "என்னைப் பொறுத்தவரையில் அந்த ஆடியோ லாஞ்சில் போயஸ் கார்டன் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏன் சுசித்ரா அவரைப் பற்றி பல விஷயங்களை கூறி வருகின்றார்.
அந்த விமர்சனங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. போயஸ் கார்டனை மட்டும் குறிப்பிட்டு பேசியிருந்த தனுஷ் ஏன் சுசிலீக்ஸ் பற்றி பேசவில்லை. அதுவும் தானே சோசியல் மீடியாவில் அவரின் பெயரை கெடுத்துக் கொண்டிருந்தது. அப்போ, எல்லாம் பப்ளிசிட்டிக்காக தனது படத்தை பில்டப் பண்ண வேண்டும் என்பதற்காக தனுஷ் செய்த ட்ரிக்ஸ்" என்று கூறியிருந்தார் பிஸ்மி.