தனுஷ் பட நடிகைக்கு திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி

Published on: January 10, 2020
---Advertisement---

2fc7cbc23195fcf7cc8ed67fdadc49b7

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் தற்போது ’சதுர்வேதம்’என்ற மலையால திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதால் மஞ்சுவாரியர் ரிஸ்க் எடுத்து ஒரு சில சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மஞ்சு வாரியரின் கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஒரு வாரம் முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment