
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் அவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷின் கெட்டப் தொடர்பான சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கர்ணன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனுஷே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பனியன், லுங்கி அணிந்த படி கையில் பெரிய கத்தியுடன் தனுஷ் நிற்கிறார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘மீண்டும் அசுரன்’ என பதிவிட்டு வருகின்றனர்.
#கர்ணன் #karnan shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC
— Dhanush (@dhanushkraja) January 28, 2020