Categories: latest news

கோலிவுட்டில் தனுஷ்தான் டாப்பு!.. தெலுங்கு, ஹிந்தியிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறாரே!….

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறியவர்தான் தனுஷ். ஒருபக்கம் ஜனரஞ்சகமான கமர்சியல் மசாலா திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு பக்கம் புதுப்பேட்டை, ஆடுகளம், அசுரன், கர்ணன், குபேரா போன்ற படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். இரண்டு முறை தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

ஒருபக்கம் நடிகராக மட்டுமின்றி இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என கோலிவுட்டில் வலம் வருகிறார். இதுபோக தமிழ் சினிமா மட்டுமின்றி நேரடி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார் தனுஷ்.

இப்போதுள்ள இளம் நடிகர்களில் இந்த சாதனைகளை தனுஷை தவிர வேற யாரும் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். நேற்று கூட இவரின் நடிப்பில் உருவான Tere Ishk Mein திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியானது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

தனுஷின் படங்களை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்கள் திரைப்படங்களை பார்ப்பதற்கு டிக்கெட் முன் பதிவு செய்ய BookMyShow இணையதளத்தைதான் நாடுகிறார்கள். அந்த வகையில் அதிலும் தனுஷ்தான் முன்னணியில் இருக்கிறார்.

அவரின் குபேரா படத்தை முதல் நாள் பார்க்க 328 ஆயிரம் டிக்கெட்டுகளும், தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தை முதல் நாள் பார்க்க 279 ஆயிரம் டிக்கெட்டுகளும், நேற்று வெளியான Tere Ishk Mein படத்தை பார்க்க 262 ஆயிரம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது சாதனையாக பார்க்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்