துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ் ஏதாவது 50-வது படமான ராயன் படத்தில் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாகும். அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அறிமுகமான தனுஷ் அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனுஷை சிறந்த நடிகராக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் செல்வராகவனையே சேரும். அண்ணன் செல்வராகவனை தொடர்ந்து தனுஷின் அசுர வளர்ச்சிக்கு காரணம் வெற்றிமாறன் தான்.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நடிகர் தனுஷை மிகச்சிறந்த நடிகராக வெற்றிமாறன் மாற்றிய நிலையில், தனுஷ் தானும் இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டு ப. பாண்டி படத்தை இயக்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது ராயன் படத்தையும் தனுஷ் இயக்கி உள்ளார்.
நேற்று வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், முதல் நாளில் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படமாக கர்ணன் படம் 10 கோடியை கடந்து இருந்தது.
இந்நிலையில், நேற்று வெளியான ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 11 கோடி வசூலையும் தெலுங்கில் 1.5 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 12.5 கோடி வசூலை இந்திய அளவில் தனுஷின் ராயன் படம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
சனி, ஞாயிறு மற்றும் ஆடிக் கிருத்திகையான திங்கட்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ராயன் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா திரைப்படத்தை…
Chinmayi: தமிழ்…
தென்னிந்திய சினிமாவில்…
Good bad…
Gossip: தமிழ்…