கர்ணன் படத்தை கைவிட்டுவிட்டு பாலிவுட் செல்கிறாரா தனுஷ்? அதிர்ச்சி தகவல்

Published on: February 13, 2020
---Advertisement---

b4a63632817e1febf11b50f9635ef5a2

இந்த படத்தின் 75 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் 10 நாட்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீதி உள்ள 10 சதவீத அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருந்தார்

இந்த நிலையில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தனுஷ் பாலிவுட் படத்தில் நடிக்க செல்கிறார். அங்கு அவர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் படப்பிடிபில் கலந்து கொண்ட பின்னர்தான் கர்ணன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாரிசெல்வராஜ் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

ஆனால் படக்குழுவினர் இது குறித்து தெரிவித்த போது ’இந்த இடைப்பட்ட காலத்தில் ‘கர்ணன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விடுவோம் என்றும் இதனால் படத்தின் ரிலீஸ் திட்டத்தில் எந்தவித தாமதமும் இருக்காது என்றும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது 

Leave a Comment