தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகருக்கு சம்பளம் 120 கோடி ! அப்போ படத்தின் பட்ஜெட் !

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷை வைத்து பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் ராஞ்சனா என்ற பாலிவுட் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் தனுஷ் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வரும் அக்‌ஷய் குமாரின் சம்பளம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக அக்‌ஷய் குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்த படத்தின் பட்ஜெட் பல மடங்கு உயரும் என சொல்லப்படுகிறது.

Published by
adminram