மீண்டும் டேக் ஆஃப் ஆகும் இளையராஜா பயோபிக்! டெல்லி போனது இதுக்குத்தானா தனுஷ்?

Published on: March 18, 2025
---Advertisement---

தனுஷ்:

இப்போது கோலிவுட்டில் அதிக படங்களை கைவசப்படுத்தி இருப்பது தனுஷ் தான். அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான திரைப்படம் இளையராஜாவின் பயோபிக்.

அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் திரைக்கதை எழுத படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. படத்தின் பூஜையும் நல்ல முறையில் போடப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆணால் படத்தின் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

இளையராஜாவின் ஆசை:

இதற்கிடையில் தன்னுடைய வாழ்க்கை வரலாறை தத்துரூபமாக எடுக்கும் வகையில் தன்னுடன் இயக்குனர் பயணப்பட வேண்டும் என இளையராஜா விரும்ப கிட்டத்தட்ட பல மாதங்களாக அருண் மாதேஸ்வரன் இளையராஜா உடனே பயணித்து வந்தார் . இதற்கிடையில் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில் சில பல கருத்து வேறுபாடு சில முரண்பாடுகள் என எக்கச்சக்க சிக்கல்கள் இருப்பதாலும் படத்தை தயாரிக்க இருந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டதாலும் படம் டிராப் ஆகிவிட்டது என ஒரு செய்தி வெளியானது. ஏற்கனவே இந்த படத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனமும் இளையராஜாவும் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தது.

டெல்லி நிறுவனத்துடன் டீலிங்:

இப்போது அந்த நிறுவனம் தயாரிப்பு பணியில் இருந்து விலகிக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை எப்படியாவது எடுத்தே தீர வேண்டும் என்ற முடிவோடு தனுஷ் இருக்கிறாராம். தற்போது தனுஷ் டெல்லி சென்றது அனைவருக்குமே தெரியும். அது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியானது.

அது மட்டுமல்ல அங்கு இருக்கும் சில கார்ப்பரேட் கம்பெனிகளுடன் தனுஷ் டீலிங் வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. அது இளையராஜாவின் பையோ பிக் படத்திற்காகத்தான் என இப்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே மும்பை தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதால் டெல்லியில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒரு கம்பெனி இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் கூடிய சீக்கிரம் இளையராஜாவின் பயோ பிக் ஆரம்பிக்கப்படும் என கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. தற்போது தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி அந்த படத்தில் நடித்தும் வருகிறார். அதனை அடுத்து சேகர் கமுலாவுடன் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

லைன் அப்பில் இருக்கும் படங்கள்:

அதனைத் தொடர்ந்து அமரன் பட இயக்குனருடன் ஒரு படம். போர் தொழில் பட இயக்குனருடன் ஒரு படம். ரப்பர் பந்து இயக்குனருடன் ஒரு படம். ஹாலிவுட் படம். ஹிந்தி படம் என அடுத்தடுத்து தன்னுடைய கேரியரை பிசியாக வைத்து வருகிறார் தனுஷ்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment