சிறந்த நடிகருக்கான தேசிய விருதையெல்லாம் வென்று நடிப்பு அசுரனாக நிற்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இந்த மூன்று படங்களுமே தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் ‘யாரடி நீ மோகினி’. அல்லு அர்ஜுன், அணு மேக்தா நடித்திருந்த ‘ஆர்யா’ படத்தின் ரீமேக்தான் ‘குட்டி’. இதேபோல் 2008ல் தெலுங்கில் வெளியான ‘ரெடி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘உத்தமபுத்திரன்’.
இவர் தற்போது ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் தனுஷ்.
இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடைசியாக இவர் தனுஷின் ‘தங்கமகன்’ படத்திற்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் இருவரும் இணைவதால் இப்படத்தின் மீது இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பா.பாண்டி படத்திற்குப் பின் இப்படத்திற்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் நடனமாடிவருகின்றனர்.
அந்த வீடியோவின் பின்னணியில் ‘மின்சாரக்கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/AVinthehousee/status/1434782558118580224
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…