ரஜினியின் இந்த படத்தை ரீமேக் செய்ய தனுஷூக்கு ஆசையாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களை ரீமேக் செய்ய கோலிவுட் திரையுலகினர் விருப்பத்தில் உள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் இருந்தும் அந்த படங்களின் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பில்லா உள்பட ஒருசில படங்கள் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து கலக்கிய ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்ய தனுஷ் விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கடந்த 1981-ஆம் ஆண்டு ரஜினிகாந்த், லட்சுமி, மேனகா நடிப்பில் உருவான திரைப்படம் ’நெற்றிக்கண்’. தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். குறிப்பாக தந்தை வேடம் என்பது பெண்களிடம் சபலம் கொள்ளும் ஒரு நெகட்டிவ் கேரக்டர் ஆகும்.

இந்த படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க விரும்புவதாகவும் இந்த படத்தில் தனக்கு நெகட்டிவ் இமேஜ் கிடைத்தாலும் நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு திரைப்படம் என்றும் தனுஷ் கூறியிருக்கிறார். தனுஷின் இந்த ஆசை எப்போது நிறைவேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Published by
adminram