
அமிதாபச்சன் நடித்த பிங்க் ரீமேக்கில் அஜீத் மற்றும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய வேடங்களில் நடித்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது
அமிதாப்பச்சன் மற்றும் அஜித் நடித்த நேர்மையான வழக்கறிஞர் வேடத்தில் பவன்கல்யாண் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் மூன்று பெண்களில் ஒரு முக்கிய கேரக்டரில் அஞ்சலி நடிக்க இருப்பதாகவும் அவர் அனேகமாக டாப்ஸி மற்றும் சாரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் இரண்டு பெண்களில் ஒருவராக ’தர்பார்’ படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய நிவேதா தாமஸ் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு பெண் கேரக்டரில் ஹன்சிகா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி, தமிழ் போலவே தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது