இந்திய அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் செல்லும் பேருந்தை ஓட்டிச் சென்று தங்களை எல்லாம் திகைப்படைய செய்ததாக லஷ்மன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் அவர் குறித்த தங்கள் நினைவுகளை வீரர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் தோனி செய்த ஒரு சேட்டையான விஷயம் குறித்து பேசியுள்ளார்.
நேற்று அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘2008 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்னர், அப்போது அணி வீரர்கள் அனைவரும் அணிக்கான பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், அப்போது பேருந்து ஓட்டுனரை அவரது சீட்டில் இருந்து நகர்த்திவிட்டு தோனியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். நாக்பூர் மைதானத்திலிருந்து ஹோட்டல் வரை தோனியே பஸ்ஸை ஓட்டினார்.’ எனக் கூறியுள்ளார். இது நான் உட்பட எல்லா வீரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…