ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக முன்னாள் இந்தியக் கேப்டன் தோனி செயல்படாததால்தான் அவரை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த பட்டியலில் முன்னால் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியில் அவர் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக அணியில் விளையாடாத தோனியின் வயதை கணக்கில் கொண்டுதான் அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
ஆனால் தோனியின் இந்த நீக்கத்துக்குப் பின்னர் பாஜக செயல்பட்டுள்ளதாக அஷோக் ஸ்வெய்ன் என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார். அவர், தனது டிவிட்டில் ‘தோனியை ஒரு கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் மறந்து விடவேண்டியதுதான். அவர் தனது தேச பக்தியை ரசிகர்களிடம் காட்ட ராணுவத் தொப்பியை அணிந்தது. ராணுவச் சின்னத்தை கிளவுஸில் அணிந்தது என பலவற்றையும் செய்துவிட்டார். ஆனால் அவர் ஜார்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாததால் அவர் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார். இந்தியனாக இருக்க பாஜகவில் சேருங்கள்’ எனத் தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…