இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது கடந்த் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம். அதன் பின்னர் அவர் எந்தவொரு சர்வதேச போட்டி மற்றும் உள்ளூர் போட்டியிலும் விளையாடவில்லை.
இதனால் அவர் மேற்கொண்டு இந்திய அணிக்கு விளையாடுவாரா என்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி இருந்தது. அதுகுறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பலரும் பலவிதமானக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னணி வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.
விடாமுயற்சி படத்தின்…
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…